கேள்வி பதில்
கேள்வி பதில்

வயிற்றில் புண்கள் உண்டாக காரணம் என்ன?

நேரத்துக்கு சரியாக சாப்பிடாவிட்டால் வயிற்றில் புண்கள் உருவாகும் என்பது மருத்துவர்களிடமும் மக்களிடமும் இருக்கும் ஒரு தவறான நம்பிக்கையாகும். புண்கள் உருவாகிவிடும் என்ற பயத்திலேயே பலர் பசியில்லாமலேயே கடிகார நேரத்தை கவனித்து சாப்பிடுகிறார்கள். தங்களின் பிள்ளைகளுக்கும் கடிகார நேரத்தை பார்த்து, அவர்களுக்கு பசியில்லாமலேயே உணவளிக்கிறார்கள். பசியில்லாமல் சாப்பிடும் உணவானது அவர்களுக்கு பல வகைகளில் தொந்தரவுகளையும் நோய்களையும் உருவாக்குகிறது. அவற்றில் முக்கியமான ஒன்றுதான் (ulcer) வயிற்றில் உருவாகும் புண்கள்.

பசி இல்லாவிட்டால் வயிற்றில் ஜீரண சக்தி இருக்காது. பசியில்லாமல் உண்ணும் உணவு அதிக நேரம் வயிற்றில் தங்கி, வயிற்றிலேயே கெட்டு, அழுகிப் போய், இரசாயனங்களையும், கெட்ட வாயுக்களையும் உண்டாக்கும். வயிற்றில் அழுகிப்போன உணவும், அந்த அழுகிய உணவுகள் வெளிப்படுத்தும் இரசாயனங்களுமே வயிற்றில் புண்கள் உருவாக முக்கிய காரணமாக இருக்கிறது. அல்சர், என்று அழைக்கப்படும் வயிற்றுப்புண்கள் ஏழைகளுக்கு வருவதில்லை. பசியின்றி உண்ணும் வசதி படைத்தவர்களுக்கு மட்டுமே அதிகமாக உருவாகிறது. சாப்பிடாமல் இருப்பதுதான் வயிற்றுப் புண்களுக்கு காரணம் என்றால் அந்த நோய் வசதி படைத்தவர்களுக்கு உண்டாக கூடாது.

வீட்டில் விலங்குகளை வளர்ப்பவர்கள், அவற்றுக்கு வைக்கப்படட உணவை அவை சாப்பிடாமல் விட்டுவிட்டாலோ, வீட்டில் உணவை முழுமையாக சாப்பிடாமல் மீதம் வைத்தாலோ, மறுநாள் அந்த உணவுகள் அழுகி, நீர்விட்டு, நுரைதள்ளி, பிசுபிசுப்பாக இருக்குமே அதுதான், உண்ட உணவு ஜீரணமாகாத போது வயிற்றிலும் நடக்கும்.

பசியில்லாமலோ, பசிக்கு அதிகமாகவோ, ஜீரணிக்க கடினமான உணவையோ சாப்பிடும் போது மட்டும்தான் அந்த உணவுகள் ஜீரணமாகாமல் வயிற்றில் அழுகி புண்கள் உருவாகும் ஒழிய குறைவாக சாப்பிடுவதால் எந்த நோயும் உருவாகாது. மாறாக குறைவாக சாப்பிடுவது உடலுக்கு நன்மைகளை மட்டுமே செய்யும்.

பசியில்லாமல் சாப்பிடாதீர்கள். காரம் மற்றும் புளிப்பு சுவைகளை தவிர்த்திடுங்கள். இனிப்பான பழங்களை அதிகமாக சாப்பிடுங்கள், (ulcer) அல்சர் குணமாகிவிடும்.


« PREV
NEXT »

No comments