வலிகளும் அவற்றுக்கான காரணங்களும் தீர்வுகளும்

எந்த துன்பத்தையும் தாங்கிக்கொள்ளும் மனப்பக்குவம் மனிதர்களிடம் இருக்கிறது, ஆனால் வலிகள் உண்டானால் மட்டும் அவற்றை தாங்கிக்கொள்ளும் மனப்பக்குவம் மனிதர்களிடமில்லை.

மனிதர்கள் மிகவும் பலகீனமானவர்கள், சிறு வலிகளை கூட பொறுத்துக்கொள்ளாமல் வலி நிவாரண மருந்துகளை தேடி ஓடுகிறார்கள். அந்த போதை மருந்துகள், மனிதர்கள் வலிகளை உணராதவாறு அவர்களின் மூளையையும் உடலையும் மந்தமாக்குகிறது. இது அவர்களுக்கு கேடானது.

ஒருவர் சைக்கிளில் இருந்து விழுந்துவிட்டார் அல்லது மோட்டார் சைக்கிளில் இருந்து விழுந்துவிட்டார் என்று வைத்துக்கொள்ளுங்கள். கை, கால், முட்டிகளில், சிராய்ப்பு காயங்கள் ஏற்பட்டிருக்கிறது. விழுந்த அந்த நிமிடம் எழுந்தவுடன் அவருக்கு வலிகள் இருக்குமா?. சிந்தித்துப் பாருங்கள் வலிக்குமா? கண்டிப்பாக அப்போது வலிகள் இருக்காது. அடிப்பட்ட உணர்வுகூட இருக்காது. ஆனால் அன்று இரவு வலி லேசாக ஆரம்பிக்கும், தூங்கி எழுந்த மறுநாள் அதிகப்படியான வலியாகவும், வீக்கமும், கை கால் அசைக்க முடியாத சூழ்நிலைகள் கூட ஏற்படலாம்.

பல ஆண்களுக்கு இந்த அனுபவம் இருக்கும், ஏன் இந்த வினோதம். விழுந்ததும் வலிக்காமல், ஏன் இரவு வலிக்கிறது?. மறுநாள் ஏன் வலி அதிகரிக்கிறது?. பதிலை பின்பு பார்ப்போம்.

ஒருவருக்கு மலச்சிக்கல் ஏற்பட்டு ஐந்து நாட்களாக மலம் கழிக்க வில்லை என்று வைத்துக்கொள்வோம். ஐந்தாவது நாள் வயிற்று வலி ஏற்பட்டு, சிரமப்பட்டு மலம் கழிக்கிறார். ஐந்து நாள் மலம் கழிக்காமல் இருந்த போது, உருவாகாத வயிற்றுவலி, ஐந்தாவது நாள், மலம் வெளியேறும் போது ஏன் ஏற்படுகிறது?. பதிலை பின்பு பார்ப்போம்.

ஒரு பெண் கர்ப்பம் தரித்து பத்து மாதங்கள் ஒரு குழந்தையை சுமக்கிறாள். பத்து மாதங்கள் சுமக்கும் போது ஏற்படாத வலி, அந்தக் குழந்தை தாயின் கர்ப்பப்பையிலிருந்து வெளியேறும் போது ஏன் உருவாகிறது?.

இப்போது மேலே குறிப்பிட்ட சூழ்நிலைகளில் உருவாகும் வலிகளுக்கான காரணங்களை தெரிந்துக்கொள்வோம்.

வலிகள் ஏன் உருவாகின்றன? 
ஒரு மனிதனுக்கு வலிகள் உருவாக பல காரணங்கள் இருக்கலாம் அவற்றில் சில.

1. நோய்கள் குணமாகும் போது வலிகள் உருவாக்கலாம்.

2. உடலின் இயக்கத்திறன் அதிகரிக்கும் போது வலிகள் உருவாக்கலாம்.

3. உடலின் இயக்கச் சக்தி குறைந்து, சக்தி பற்றாக்குறை ஏற்படும் போது வலிகள் உருவாக்கலாம்.

4. உடலின் சக்தி ஒரே இடத்தில் குவியும் போது வலிகள் உருவாக்கலாம்.

5. உடல் உழைப்புக்கு போதிய சக்தி கிடைக்காமல் வலிகள் உருவாக்கலாம்.

இன்னும் பல காரணங்களை குறிப்பிட்டாலும் மனித உடலின் நன்மைக்காகவே வலிகள் உருவாகிறது. உடலில் ஒரு இடத்தில் வலி உருவாகிறது என்றால் அங்கே குணப்படுத்தும் வேலைகள் நடந்துக் கொண்டிருக்கிறது என்றுதான் அர்த்தம்.

வலி நல்லது, அது உடலின் நன்மைக்காகவே உருவாகிறது 
தொடக்கத்தில் வலி, லேசாகத்தான் இருக்கும் அந்த வலியை இரசாயன மருந்துகள், எண்ணைகள், கிரிம் போன்றவற்றை கொண்டு அடக்கும் போது, நோயின் தீவிரம் அதிகரிக்கும். நோயை குணப்படுத்த உடல் அதிக உழைப்பையும் சக்தியையும் விரயமாக்குவதால் வலி அதிகரிக்கிறது.

வலிகளுக்கு தீர்வுகள் 
உடலில் லேசான தொந்தரவுகளும் வலிகளும் இருக்கும் போதே, உடல் உழைப்பைக் குறைத்து, முக்கியமாக உணவைக் குறைத்து, உடலுக்கு போதிய ஓய்வுக் கொடுத்தால், வலிகள் தொடக்கக்கட்டத்திலேயே குறைந்து மறைந்துவிடும்.

இரவில் வெறும் வயிற்றில் உறங்குவது, நோயாளிகளுக்கு நன்மை பயக்கும். அதிகப்படியான பசி இருந்தால் வெறும் பழங்களை மட்டும் சாப்பிடலாம். கண்டிப்பாக இரவு 9 மணிக்கு படுக்கைக்கு செல்ல வேண்டும்.


To Top