உன்னைப் பார்க்கும் வேளைகளில்
திருவிழா சந்தையிலே
இராட்டினத்தை முதன்முதலாய்
பார்க்கும் குழந்தையைப் போல்

அதிர்ச்சியாகவும் ஆச்சரியமாகவும்
வியந்தும் பார்க்கிறேன்
நெருங்கிவரத் துடிக்கிறது மனது

உன்னைப் பார்க்கவும்
உன்னிடம் பேசவும்
கைகோர்த்து நடக்கவும்
ஆசையாக இருக்கிறது
பயமாகவும் இருக்கிறது

வானவில்லின் இரசிகனாய்
தூரம் நின்று இரசித்துவிட்டு
உன்  நினைவுகளைச்
ஓவியமாய் சுமந்து
திரும்பிச்செல்கிறேன்