உன் வருகைக்காக
காத்திருக்கும் சமயங்கள்
மிகக் கொடுமையானவை - பெண்களின்
மகப்பேருக்கு இணையானவை

கடிகார முட்களை முந்திக்கொண்டு
வேகமாகக் கடந்து செல்லும்
மணித்துளிகள்

நேரத்தை ஓடவிட்டு
கடிகாரமுட்களோ
தவன்று கொண்டிருக்கும்
உன் கொலுசின் ஓசையைத்தேடி
மனதோ பறந்து கொண்டிருக்கும்

நீ வந்துவிட்டால்
அனைத்தும் தலைகீழாக
மாறும்

அருகே மெல்ல அமர்ந்து
நீ கதைக்கத் தொடங்கிவிட்டால்
சொக்கி நின்றுவிடும் காலம்
கடிகார முட்களோ - நிற்காமல்
ஓடிக்கொண்டிருக்கும்