உன் இதழ்கள் - புன்னகை
பூத்துக் கொண்டிருப்பதை
பார்த்துக் கொண்டே
இலையுதிர்காலத்திற்காக
காத்துக்கொண்டிருக்கிறேன்

உன் புன்னகை
உதிர்வதாக இருந்தால்
என் மீது உதிரட்டும்
என் காதல் பூக்கட்டும்