பெண்ணே
எனக்கு சுதந்திரம் வேண்டாம்
உண்மைதான், சத்தியமாக
எனக்கு சுதந்திரம் வேண்டாம்

என்றும் உன் அடிமையாகவே
இருக்க விரும்புகிறேன்- நான்
உன் மனச்சிறையில்
ஒரு சின்ன இடம் கொடு
அவ்வண்ணமே உன் கட்டிலிலும்

உன் தேவைகளை
நிறைவேற்றும்
அடிமை நான் - எனக்கு
சுதந்திரம் வேண்டாம்

சுதந்திர மனிதனாக
உலகில் சுற்றித் திரிவதை
விடவும் - ஒரு
அடிமையாக உன் பின்னால்
சுற்றுவதே மகிழ்ச்சி