ஒரு முறை திருடியவள் - நீ
அனுதினமும்
பறிகொடுப்பவன் நான்
உள்ளத்தை

உன் மீது தப்பில்லை
திருடியவன் உறங்கிவிடுவான்
நிம்மதியாக - பறிகொடுத்தவன்
எவ்வாறு உறங்குவான்?
இதுதானே உலக வழக்கம்

எல்லோரும்
திருட்டுப்போன பொருளை
எண்ணி ஏங்குவார்கள் - நான்
திருடியவளை எண்ணி
ஏங்குகிறேன்

என் மனதை
நீயே வைத்துக்கொள் - இனி
அது உன் பொறுப்பு

திருட்டுக்கு தண்டனையாக
உன்னை - என் மனசிறையில்
ஆயுள் கைதியாக அடைக்கிறேன்
விடுதலையை மட்டும்
எதிர்பார்க்காதே