விழித்துக்கொண்டே
எல்லோரும் விழத் துடிக்கும்
கிணறு – காதல்

அவள் பார்வை பட்டாலே
கரைந்துவிடுவேன்
அவள் புன்னகைத்தாலோ
பஸ்பமாவேன்

அவ்வாறு இருக்கையில்

அவள் அருகே அமரும் போதும்
அவள் சிரித்து பேசும் போதும்
அவள் விட்டுப் பிரியும் போதும்

செத்துச் செத்து பிறக்கிறேன்
அவளால், அவளுக்காக
அவளுக்காக மட்டுமே