பகல் முழுதும்
கைகோர்த்து நடைபழகு
என்றழைக்கும் - உன்
வளையல்களும்

அன்பேவா, முன்பேவா
என்றழைக்கும் உன்
கொலுசுகளும்

இரவில் மட்டும்
மௌனம் காப்பது ஏன்? - உன்
வெட்கத்தின் வெளிப்பாடா - உன்
பெண்மையின் பேறுகாலமா

உன் விரல் தீண்ட
இடுப்பில் செல்லமாய் கிள்ள
சங்கு கழுத்தில் - ஒரு
செல்ல கடிக் கடிக்க
உதடுகளில் உறவாட

கை கோர்த்து
கால் பின்னி
இடையளந்து

இடர்களின்றி இன்பம் பெற
இடை முழுதும் நான் அளக்க - நான்
இடை இடையே தடுமாற - நீ
இடை இடையே புன்னகைக்க

இப்படியும் ஒரு ஆசை
எப்போதும் நிறைவேறும்
காத்திருக்கும் காலம்
கடந்து தான் செல்லுதடி

ஆண்களுக்கு ஆசை உண்டு
பெண்களுக்கும் மீசை உண்டு