Default Image

Months format

Show More Text

Load More

Related Posts Widget

Article Navigation

Contact Us Form

404

Sorry, the page you were looking for in this blog does not exist. Back Home

அண்மைய பதிவுகள்

நோய்களின்றி வாழ கற்றுக்கொள்ளுங்கள்

ஐம்பது வயது வரையில் நாய் படாத பாடுபட்டு சிறுக சிறுக பணம் சேர்த்து; ஐம்பது வயதில், இல்லாத நோய்களுக்கு மருத்துவம் செய்து. மருத்துவர் எனும் வியாபாரிகளிடமும் மருந்து கம்பேனிகளிடமும் ஏமாறும் அவலநிலை யாருக்கும் உண்டாகக் கூடாது.

சேர்த்த பணம் முழுவதையும் இழப்பது மட்டுமில்லாமல், சொத்து சுகத்தை விற்று, கடன்பட்டு கடைசியில் நோயாளிகளாகவே பலர் மரணிக்கிறார்கள். இல்லாத நோய்களுக்கு வைத்தியம் பார்த்ததில் சேர்ந்த கடன்களை அடைக்க முடியாமல், அவர்களின் பிள்ளைகளும் கடன்காரர்களாகவும், நோயாளிகளாகவும் மாறுகின்றனர்.

இந்த அவலநிலை ஏன் நம் சமூகத்திற்கு உருவானது? அறிவியல், வானியல், மருத்துவம், பொருளியல் என் அனைத்துத் துறையிலும் சிறந்து விளங்கிய நம் இனம் இன்று சீர்கெட்டுக் கிடக்க காரணம் என்ன?. இன்று அனைத்துத் துறைகளிலும் நாம் மற்ற இனத்தவர்களை எதிர்பார்த்து நிற்பதற்கு காரணமென்ன?

குறள் 942:
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது, அற்றது போற்றி உணின்.

உரை:
இதற்கு முந்தைய வேளையில் உண்ட உணவு முழுமையாக ஜீரணமாகி விட்டதா என்பதை அறிந்து. இப்போது இருக்கும் பசியின் அளவையும் அறிந்து, பசியின் அளவுக்கு தக்க உணவை உட்கொண்டால். இந்த உடலை பாதுகாக்க எந்த மருந்தும் தேவைப்படாது.

நம் வள்ளுவர் பெருந்தகை சொன்னதைக் கேட்காமல், வெள்ளைக்காரன் சொன்னான், ஜப்பான்காரன் சொன்னான் என்று அடுத்தவன் பின்னால் சென்றதும். நம் முன்னோர்களை முட்டாள்கள் என எண்ணியதும் தான் இதற்குக் காரணம்.

திருவள்ளுவர் திருக்குறளில் மருந்து என்ற தலைப்பில் பத்து பாடல்களை வழங்கியுள்ளார் அவற்றை புரிந்துகொண்டு பின்பற்றினாலே நோய்களின்றி வாழலாம், அனைத்து நோய்களும் குணமாகும். என்ன இல்லை நம்மிடம்?. உலகின் அனைத்து அறிவும், அனைத்து ஞானமும் தமிழ் மொழியில் தான் உள்ளது, ஆனால் அவற்றைத் தேடி படிக்கத்தான் ஆட்களில்லை. அவற்றைப் படிக்காவிட்டால் இழப்பு என்னமோ நமக்குத்தான்.

பாரம்பரிய மருத்துவங்களான சித்தா, யுனானி, ஆயுர்வேதம், அக்குபங்சர், அக்குப்பிரசர், நாட்டு வைத்தியம் என் பல இருக்க, இரசாயனங்களை மருந்தாகப் பயன்படுத்திய பிறகுதான். மனிதனின் நோய்கள் முற்ற ஆரம்பித்து உயிரையும் குடிக்க ஆரம்பித்தன.

இன்று சிறிய நோய்களாக இருக்கும் பல நோய்கள் முற்றி உயிரைக் குடிப்பதற்கு இரசாயன மருந்துகளே காரணம். நோய்கள் உண்டான பிறகு வைத்தியம் தேடாதீர்கள், நோய்களின்றி வாழ கற்றுக்கொள்ளுங்கள். நீங்கள் சம்பாதிக்கும் பணத்தில் சல்லிக் காசைக்கூட மருத்துவத்துக்காக செலவு செய்யக் கூடாது.


No comments:

Post a Comment

மனித வாழ்க்கைக்கான அர்த்தம் தேடி தொடங்கிய பயணத்தில் நான் கண்டுகொண்ட விசயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். கட்டுரைகளை வாசித்தபின் உங்களின் கருத்துக்களை பதிவு செய்யவும். நமது இணையதளங்கள்: holisticrays.com, Reiki Tamil, பதில்

"மின்னஞ்சல் மூலமாகா புதிய கட்டுரைகளை நேரடியாகப் பெறுவதற்கு உங்களின் மின்னஞ்சல் முகவரியைப் பதிவு செய்யவும்"