வாழ்க்கை வாழ்வதற்கே
என்று தெரியும்- நான்
வாழப் பிறந்தேன்
என்பதும் புரியும்

பிறப்பிற்கும் இறப்பிற்கும்
உள்ள இடைவெளியே வாழ்க்கை
என்பதும் புரிந்துவிட்டது

நீ இல்லாமல்
வாழ்ந்து என்ன பயன்
என்றுதான் தெரியவில்லை