கண்டத் துண்டமாக வெட்டிவிடு
தீயிட்டுக் கொழுத்து
தோலை முழுதும் உரித்துவிடு
இருதயத்தை வேரோடு பிடுங்கு

உனக்காக மகிழ்ச்சியாக
ஏற்றுக் கொள்வேன்
மறந்துவிடு - என்று
மட்டும் சொல்லாதே

அந்த கொடூர வலியை
தாங்கும் சக்தி மட்டும்
என்னிடமில்லை