புதியவை
latest

மனதின் நினைவாற்றல்

சில வருடங்களுக்கு முன்பாக ஒரு பொருளுக்கு ஆசைப்பட்டீர்கள் என்று வைத்துக் கொள்வோம். ஆனால் அந்த பொருள் எங்கு தேடியும் கிடைக்கவில்லை, கால போக்கில் மறந்து போனீர்கள். பல வருடங்கள் கழித்து அந்த பொருள் பரிசாகவோ, இனாமாகவோ, கீழே கிடந்தோ, நண்பர்கள், உறவினர்கள் மூலமாக உங்களுக்கு கிடைக்கலாம். அல்லது எதாவது ஒரு கடையிலோ, இடத்திலோ அந்த பொருளை நீங்கள் பார்க்கலாம். இப்போது அந்த பொருளை அடையும் வாய்ப்பும், வசதியும் உங்களிடம் இருக்கலாம்.

பல வருடங்களுக்கு முன்பாக நீங்கள் ஆசைப்பட்டு, கிடைக்காமல் நீங்களே மறந்துப் போன ஒரு விஷயத்தை கூட உங்கள் மனமானது நினைவில் வைத்திருக்கும். அந்த பொருளை தேடிக்கொண்டிருக்கும். வாய்ப்புகள் அமையும் போது உங்களுக்கும் அந்த பொருளுக்கும் ஒரு தொடர்பை ஏற்படுத்தும். இது போன்ற நிகழ்வு பலருக்கு பல சந்தர்ப்பங்களில் வெவ்வேறு விதமாக நடந்திருக்கலாம்.

பொருட்கள் மட்டுமின்றி, போக விரும்பும் இடங்கள், சந்திக்க விரும்பும் மனிதர்கள், அடையத் துடிக்கும் வெற்றிகள், என அனைத்து விசயங்களையும் மனம் பதிவு செய்து, அதற்கான முயற்சியில் தொடர்ந்து செயல் புரிந்துக் கொண்டே இருக்கும். மனிதர்கள் விழிப்பு நிலையில் இருக்கும் போது, மனதுடன் தொடர்பு கொள்ள முடியாது. அதனால் மனதில் இருக்கும் பதிவுகளும், எண்ணங்களும், சிந்தனைகளும், மனிதர்களுக்கு விளங்குவதில்லை.

உண்மையில் உங்கள் வாழ்க்கைக்கு தேவையான ஒன்றை அல்லது உண்மையாக நீங்கள் நேசித்த ஒன்றை நீங்கள் அடைய முடியாமல் போனாலும். மனம் அதை மறக்காமல் நினைவில் வைத்திருந்து அதை அடையும் வழிகளை தேடிக்கொண்டே இருக்கும். ஒரு நாள் நீங்கள் உண்மையாக நேசித்தவை உங்களை அடைந்தே தீரும்.


« PREV
NEXT »

No comments