காதலில் விழுந்தவர்களுக்கு
சில உணர்வுகள் தோன்றுமாம்

இதயம் - படபடக்குமாம்
துடிதுடிக்குமாம்
காற்றில் மிதக்குமாம்
பாறையாய் கணக்குமாம்
பட்டாம்பூச்சியாய் பறக்குமாம்

இவற்றில் எதையுமே - நான்
அனுபவிக்கவில்லை
நீதான் என் இதயத்தை
வேரோடு பிடுங்கிச்
சென்றுவிட்டாயே