புதியவை
latest

கல்லுப்பு உடலுக்கு மிக நன்மையானது

"உப்பில்லா பண்டம் குப்பையிலே" என்று கேள்விப் பட்டிருப்போம். பண்டங்களுக்கு மட்டுமல்ல மனித உடலுக்கும் உப்பு மிக அவசியமானது. உப்பு என்பது சமையலுக்கு சுவையூட்டுவதை தாண்டியும் உடலுக்கு நன்மையளிக்கக் கூடிய பல தாதுக்கள் அதில் உள்ளது. மனிதனின் உடலில் உப்பு சக்தி குறையும் போது பல உடல் உபாதைகளும் தொந்தரவுகளும் உருவாக்கும்.

உப்பு சக்தி குறையும் போது ஏற்படக்கூடிய தொந்தரவுகள்
  1.  உடல் சோர்வு /அசதி
  2.  கை கால் சோர்வுகள்
  3.  மூட்டுகளில் வலி
  4.  இடுப்பு / தோள்பட்டை வலி
  5.  மயக்கம்
  6.  கர்ப்பப்பை கட்டிகள்
  7.  கர்ப்பப்பை வலிகள்
  8.  கர்ப்பப்பை சம்பந்தமான கோளாறுகள்
  9.  ஆண்மைக் குறைப்பாடுகள் 
  10.  ஆண்மை வீரியம் / விறைப்பு தன்மை குறைவு
  11.  குழந்தை இன்மை
  12.  கால் நரம்பு புடைத்தல்
மனிதனின் உடலில் உப்பு போதிய அளவு இருந்தால், மேலே கூறப்பட்ட எல்லாத் தொந்தரவுகளும் குறையும், படிப்படியாக குணமாகும். உப்புக்கு இயற்கையாகவே பல மருத்துவ குணங்கள் இருப்பதால் தான் நம் முன்னோர்கள் உப்பில்லா பண்டம் குப்பையிலே என்று கூறினார்கள்.

இவ்வளவு நன்மைகள் தர கூடிய உப்பை, ஆங்கில மருத்துவர்கள் உடலுக்கு ஒவ்வாது என்றும் உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் என்று ஏன் கூறுகிறார்கள்?. காரணம் மேலே கூற பட்ட தொந்தரவுகளுக்காக மட்டும் லட்சக் கணக்கானோர் உலகம் முழுவதும் மருத்துவம் செய்கிறார்கள். இதன் மூலம் கோடி கணக்கில் வருமானம் பெறுகிறார்கள் ஆங்கில மருத்துவர்கள்.

இந்த தொந்தரவுகள் சாதாரணமாக பத்து கல்லுப்பில் குணமாக கூடியவை. வருமானம் பாதிக்கும் என்பதாலும், நிரந்தரமான வருமானம் வர வேண்டும் என்பதாலும், சில ஆங்கில மருத்துவர்கள் உப்பு கெடுதி என்று பொய் பிரச்சாரம் செய்கிறார்கள். அவர்களைத் தெய்வமாக நம்பும் அப்பாவி மக்கள் வாழ்நாள் முழுவதும் வலிகளினால் அவதிப்படுகிறார்கள். மேலே கூறப்பட்டவை மட்டுமின்றி, ஆங்கில மருத்துவம் கொடிய நோய், குணப்படுத்த முடியாத நோய் என்று கூறும் எல்லா நோய்களின் பின்னாலும் ஒரு பணம் பண்ணும் வியாபார நோக்கம் இருக்கும்.

எது நல்ல உப்பு?
மின்னுவதெல்லாம் பொன்னல்ல என்பதை போல கரிப்பதெல்லாம் உப்பல்ல.
  1. தூள் உப்பு
  2. ஐயோடின் கலந்த உப்பு
  3. பாக்கெட்டுகளில் வரும் உப்பு
  4. சுத்திகரிக்கப் பட்ட உப்பு
  5. தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படும் உப்பு
  6. பிற பொருட்கள் கலக்கப் பட்ட உப்பு
  7. தொலைக்காட்சி விளம்பரங்களில் காட்டப்படும் உப்பு 
மேலே குறிப்பிடப்பட்ட எதுவுமே உப்பல்ல, கரிப்பு சுவையுடைய ஒரு பொருள் என்று சொல்லலாம் அவ்வளவுதான். மேலே உள்ள உப்பு வகைகள் உடலுக்குத் தீங்கு விளைவிக்கும். மனிதர்களின் பல தொந்தரவுகளுக்கு மேலே குறிப்பிடப்பட்ட உப்பு வகைகளை பயன்படுத்துவதுதான் முக்கிய காரணமாக இருக்கிறது.

கடல் நீரில் இருந்து உருவாக்கப்படும், எந்தக் கலப்படமும் இல்லாத கல் உப்பு மட்டுமே உண்மையான உப்பு. சமையல் முதல் எல்லாத் தேவைகளுக்கும் கல் உப்பை பயன்படுத்துங்கள்.

கல்லுப்பு மருத்துவம்
மேலே கூறப்பட்ட தொந்தரவுகள் உள்ளவர்கள், இரண்டு விசயத்தை முதலில் கவனிக்க வேண்டும்.

1. எவ்வளவு உப்பு பயன்படுத்துகிறீர்கள்
2. என்ன உப்பு பயன்படுத்துகிறீர்கள்

 தேவையில்லாமல் அளவுக்கு அதிகமாக உப்பை பயன்படுத்துபவராக இருந்தால், உப்பின் பயன்பாட்டை குறைத்துக்கொள்ள வேண்டும். தேவையில்லாமல் உப்பு சக்தி உடலில் அதிகரித்தாலும் தொந்தரவுகளை உருவாக்கும்.

மிக குறைவாக உப்பை பயன்படுத்துபவராக இருந்தால், உப்பின் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும். நல்ல உப்பு சக்தி குறைந்தாலும் உடலில் தொந்தரவுகள் உருவாகும்.

 பாக்கெட் உப்பு, தூள் உப்பு, ஐயோடின் உப்புகளை பயன்படுத்துபவர்கள், அவற்றை முதலில் குப்பையில் போட்டு விட்டு, சுத்தமான கல்லுப்பை வங்கி பயன்படுத்த வேண்டும்.

மேலே கூறப்பட்ட தொந்தரவுகள் உள்ளவர்கள், தினமும் இரவு ஐந்து கல்லுப்பைச் சப்பி எச்சிலுடன் கலந்து விழுங்கினால், தொந்தரவுகள் குறைந்து தொந்தரவுகள் குணமாகும்.

தொந்தரவு அதிகமாக உள்ளவர்கள் காலையும் இரவும் ஐந்து கல்லுப்பைச் சப்பி எச்சிலுடன் கலந்து விழுங்கினால் தொந்தரவுகள் குறையும்.

« PREV
NEXT »

No comments