கேள்வி பதில்
கேள்வி பதில்

இவற்றைப் பின்பற்றுங்கள் அனைத்து நோய்களும் குணமாகும்

அனைத்து நோய்களையும் குணமாக்கும் வழிமுறைகள்
நான் பல நோயாளிகளை சந்தித்திருக்கிறேன். பல்வேறு வகையான தொந்தரவுகள், பல்வேறு வகையான நோய்கள், சில வினோதமான நோய்கள் உள்ளவர்களை கூட சந்தித்திருக்கிறேன். நோய்கள் பலவாக இருந்தாலும் அவர்கள் அனைவரிடத்திலும் ஒரு ஒற்றுமையை கவனித்தேன், அதுதான் மனதளவில் பயம். இந்த பயம் உருவாக பல காரணங்கள் இருக்கலாம் ஆனால் அவர்களின் நோய்கள் குணமாகாமல் இருப்பதற்கு ஒரே காரணம் தான், அதுதான் அவர்களின் பயம்.

இந்த பயத்தை உண்டாக்கியவர் அவர்களின் மருத்துவர்களாக இருக்கலாம், குடும்ப உறுப்பினர்களாக இருக்கலாம், நண்பர்களாக இருக்கலாம், தொலைக்காட்சியாக இருக்கலாம், பத்திரிக்கைகளாக இருக்கலாம், வாட்ஸாப், அல்லது இணையமாகக் கூட இருக்கலாம்.

பயத்தை விதைத்தவர் யாராக இருந்தாலும் அந்த பயத்தை சுமந்துக் கொண்டிருப்பவர் நோயாளி தானே. பயத்தை விட்டு குணம் பெறுங்கள் என்றால் நம்ப மறுக்கிறார்கள். பல நோயாளிகளிடம் நான் கண்ட ஒற்றுமை என்ன வென்றால், உங்கள் நோய் குணமாகும் என்றால் நம்ப மறுக்கிறார்கள், அதுவும் மருந்து மாத்திரைகள் இன்றி குணமாகும் என்றால் துளியும் நம்புவதில்லை, கடவுளே சொன்னாலும் கூட நம்பமாட்டார்கள் போலும். அந்த அளவுக்கு பயம் அவர்களை கவ்விக் கொண்டிருக்கிறது.

அவர்கள் கண்களின் முன்பாகவே நாயும் பூனையும் எந்த மருந்து மாத்திரையும் இன்றி நோய்களை தானே குணப்படுத்திக் கொள்கின்றன. வாகனங்களில் அடிப்பட்டு எலும்புகள் முறிந்த விலங்குகள் கூட தன்னை தானே குணப்படுத்திக் கொள்கின்றன. ஆனால் இவற்றை பார்த்தும் மனிதர்களால் இது முடியும். எல்லா நோய்களும் தானே குணமாகும் என்றால் மட்டும் நம்பிக்கை கொள்ள மறுக்கிறார்கள், வேடிக்கை மனிதர்கள். எதைப் பார்த்தாலும் பயம்.

சம்பவம் 1
என் நண்பரின் மாமா ஒருவருக்கு சர்க்கரை வியாதி, அவர் காலில் புண்கள் ஏற்பட்டு விட்டது, அந்த புண்களுக்கும், நீரிழிவு நோய்க்கும் அவர் மருந்து மாத்திரைகளை உட்கொண்டு கொண்டிருந்தார். அவரை சந்தித்த நான் அவருக்கு தொடு சிகிச்சை செய்து, மருந்து மாத்திரைகளை நிறுத்தி விடுங்கள், பசித்தால் மட்டும் சாப்பிடுங்கள், புண்கள் குணமாகிவிடும், நீரிழிவு நோயும் குணமாகும் என்று கூறினேன். ஒரு வாரம் கழித்து மீண்டும் வைத்தியத்துக்கு வாருங்கள் என்று கூறி அனுப்பினேன்.

ஆறு மாதங்கள் கடந்தும் அவர் மீண்டும் வைத்தியத்துக்கு வரவில்லை, நானும் கண்டு கொள்ளவில்லை. ஆறு மாதம் கழித்து என் நண்பரை சந்தித்த போது கேட்டேன் உங்கள் மாமா எப்படி இருக்கிறார்? ஏன் மீண்டும் வைத்தியத்துக்கு வரவில்லை என்று?. அவர் கூறினார் உங்கள் வைத்தியத்தை அவர் நம்பவில்லை, நீங்கள் சொன்ன எதையுமே அவர் பின்பற்றவில்லை, என் மாமாவின் புண்கள் ஆறாமல் புண்கள் மோசமாகி, காலை வெட்டி எடுத்துவிட்டார்கள், என்று.

வாசகர்களாகிய நீங்கள் சற்று சிந்தித்துப் பாருங்கள்.
ஒரு புண்ணைக்கூட ஆற்றத் தெரியாத ஒரு மருத்துவத்தை நம்புகிறார். ஆனால் ஒரு மருந்து மாத்திரையுமில்லாமல் உன் புண் மட்டுமல்ல, நீரிழிவு நோயையும் சேர்த்து குணப்படுத்துகிறேன் என்று சொன்ன என்னை நம்பவில்லை. இங்கே தவறு யாருடையது? மருத்துவருடையதா? நோயாளியுடையதா?.

தவறு நோயாளியுடையது தான், தனக்கு எது சிறந்தது என்று தேர்ந்தெடுக்கும் அடிப்படை அறிவு கூட இல்லாதது அவரின் தவறுதான்.


சம்பவம் 2
என் கட்டுரைகளை வாசித்த ஒருவர் வெகு தூரத்திலிருந்து வாட்ஸாப் மூலம் தொடர்பு கொண்டார், அவர் அப்பாவுக்கு நீரிழிவு நோய் கால் விரல்கள் அழுகத் தொடங்கிவிட்டன, முட்டியிலும், கால் விரலிலும் புண்கள் ஏற்பட்டு பல மாதங்களாகியும் குணமாகவில்லை, டாக்டர்கள் விரலை வெட்டச்சொல்லி பரிந்துரைத்திருக்கிறார்கள். சாதாரண கால் புண்களைக் கூட குணப்படுத்தத் தெரியாத அந்த மேதாவிகளுக்கு, உறுப்புகளை வெட்டி எடுக்க மட்டும் நன்றாகத் தெரியும்.

நான் அவரிடம் படங்களை அனுப்பச் சொல்லி பார்த்து அவர் அப்பாவிடம் பேசி நோயறிந்து, என் வீட்டில் இருந்தே ஹீலிங் செய்தேன், மருந்து மாத்திரைகளை நிறுத்தினார், வாழ்க்கை முறைகளை மாற்றினார். ஒரு வாரத்தில் புண்கள் ஆறத் தொடங்கின. இதில் வேடிக்கை என்ன வென்றால் நான் அவரை பார்த்துக் கூட கிடையாது. குணமாகி விட்டார், இதுதான் நம்பிக்கை, இதுதான் மனோபலம்.

நோய்களைக் குணப்படுத்தும் வழிமுறைகள்
நோய்கள் பலவாக இருந்தாலும், அவற்றை குணப்படுத்த எளிய வழிமுறைகள் உள்ளன.

உடலை அறிந்துக் கொண்டால் அனைத்து நோய்களையும் குணபடுத்தலாம். நான் மீண்டும் மீண்டும் என் கட்டுரைகளில் சொல்வது இதைத்தான் மனம் தான் மனிதன், மனதை செம்மையாக வைத்துக் கொள்ளுங்கள், நோய் தானாக குணமாகும். கவலை, துக்கம், கர்வம், பயம் போன்ற எந்த கெட்ட குணங்களும் மனதை அண்டாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

பசி எனும் உணர்வை உணருங்கள். நன்றாக பசி உண்டாகும் வறையில் காத்திருங்கள். பசி இல்லாமல் அமிர்தமாக இருந்தாலும் உண்ணாதீர்கள். உண்மையான பசி உணர்வு உருவானாலே மனிதனின் எல்லா நோய்களும் சுயமாக குணமாக தொடங்கிவிடும்.

இரவு ஒன்பது மணிக்கெல்லாம் படுக்கைக்கு செல்லுங்கள், உறக்கம் வரவில்லை என்றாலும், வெறுமனே படுத்திருங்கள். உடல் பழகி தானே தூக்கம் வரும். இரவு உறக்கம் மிக முக்கியமானது.

இனிப்பான பழங்களை அதிகமாக உண்ணுங்கள். குறிப்பாக இரவு உணவாக வெறும் பழங்களை மட்டுமே சாப்பிடுங்கள். இவற்றைப் பின்பற்றுங்கள் அனைத்து நோய்களும் குணமாகும். ஆரோக்கியமாக வாழுங்கள்.


« PREV
NEXT »

No comments