கேள்வி பதில்
கேள்வி பதில்

ஹீலர் பாஸ்கரின் கைதின் உண்மை நோக்கம் என்ன?

ஹீலர் பாஸ்கரை வீட்டுப் பிரசவம் செய்வது எவ்வாறு என்று பயிற்சி கொடுக்கிறார் என்ற காரணத்துக்காக கைது செய்திருக்கிறார்கள். இந்த கைதின் நோக்கம் என்ன? விட்டு பிரசவம் நடக்க கூடாது என்பதா? அல்லது சுகப்பிரசவம் நடக்க கூடாது என்பதா?.

இரண்டுமே கிடையாது, யாருமே இனி சுகப்பிரசவத்தை பற்றி பேசக்கூடாது, வீட்டுப் பிரசவத்தை பற்றி பேசக்கூடாது. விட்டு பிரசவம் செய்வது எவ்வாறு என்று யாரும் யாருக்கும் கற்று கொடுக்க கூடாது என்று அனைவரையும் பயமுறுத்தும் நோக்கத்துடன் மட்டுமே ஹீலர் பாஸ்கர் அவர்களை கைது செய்திருக்கிறார்கள். இனிமேல் அனைவரும் வீட்டு பிரசவம் செய்வது எவ்வாறு என்று பேச அஞ்சுவார்கள் அல்லவா? அதுதான் அவர்களின் நோக்கம்.

சரி! தெரிந்து கொண்டேதான் கேட்கிறேன் சுகப்பிரசவமோ, வீட்டு பிரசவமோ நடப்பதினால் அரசாங்கத்திற்கு என்ன நஷ்டம்? அல்லது "வீட்டு பிரசவம் முயற்சி செய்து ஒரு பெண்மணி இறந்துவிட்டார், அதனால்தான் கைது செய்கிறோம்" என்றால் ஒரு நாளைக்கு எத்தனை மரணங்கள் ஏற்படுகின்றன ஆங்கில மருத்துவமனைகளில்? பிரசவத்தின் போது எத்தனை பெண்மணிகள் உயிரிழக்கிறார்கள்? தவறான ஊசி, தவறான மருந்து, தவறான ஆபரேஷன், என்று வருடத்திற்கு எத்தனை ஆயிரம் பேர் இறந்து போகிறார்கள்?. ஆங்கில மருத்துவத்தை தடை செய்யலாமா? ஆங்கில மருத்துவமனைகளை மூடிவிடலாமா? அரசாங்கத்திற்கு அந்த தைரியம் இருக்கிறதா? குறைந்தபட்சம், ஏன் அவர்கள் இறந்து போகிறார்கள் என்று சிந்திக்கவோ, கேள்விகளை எழுப்புவதற்கோ ஆண்மை இருக்கிறதா?. அரசாங்கத்திற்கும், அமைப்புகளுக்கும், ஊடகங்களுக்கும்?

இந்த கட்டுரையை எழுதும் நான் வீட்டில் தான் பிறந்தேன், உயிரோடு இருக்கிறேன். ஆங்கில மருத்துவமனையில் பிறந்த என் தம்பி பிறந்த அன்றே இறந்துவிட்டார்.


« PREV
NEXT »

No comments