காற்று உரசியதால்
தாவணி அசைகிறதோ
உன் தாவணி உரசியதில்
காற்று அசைகிறதோ

எவ்வாறு இருப்பினும் - உன்
தாவணி மிதக்கக் கண்டு
கற்பனையில் மிதந்து
ஆசையில் விழுந்துவிட்டேன்

சற்று நேரம் - என்னை
காதலில் மிதக்கவிடு