புதியவை
latest

எலும்பு முறிவுக்கு மருத்துவம்

எலும்பு முறிவுக்கும், எலும்பு தொடர்பான கோளாறுகளுக்கும் இந்த மருத்துவத்தை முயற்சி செய்து பார்க்கலாம். எந்த பக்கவிளைவுகளும் இல்லாமல், விரைவில் தொந்தரவுகள் குணமாகும்.

இலங்கையைச் சேர்ந்த ஒரு மருத்துவர் எனக்கு கற்றுத்தந்த மருத்துவம். இலங்கையில் இனப் பிரச்சனைகள் நடை பெற்ற போது. சிங்கள இராணுவத்தால் அடித்துத் துன்புறுத்தப்படும் தமிழ் இளைஞர்களுக்கு எலும்பு முறிவுகள் ஏற்படும் வேளைகளில் இந்த மருத்துவம் மிகவும் உதவியாக இருந்ததாக சொன்னார். நெஞ்சு எலும்பு உடைந்தால் கூட விரைவாக சேர்ந்துவிடுமாம்.

எலும்பு முறிவு, எலும்பு பலகீனம் சம்பந்தமான கோளாறுகளுக்கு மிகவும் பயன்படும். மற்ற எலும்பு சம்பந்தமான கோளாறுகளுக்கு பயன்படுத்திப் பார்த்து அதன் விளைவை தயவு செய்து எனக்குத் தெரியப்படுத்துங்கள்.

தேவையான பொருட்கள்
1 தேங்காய் மூடி
1 நாட்டுக் கோழி முட்டை
1 கரியபவளம்
 சிறிது- புனுகு / மரப்பிசின்
1 மென்மையான பல் துலக்கும் புரூஸ்
மருந்தை தயார் செய்யும் முறைகள்

தேங்காய் மூடியை நன்றாக வெயிலில் காயவைத்து (1-3 நாட்கள்). காய்ந்த பின் தேங்காய் மூடியின் உட்புறத்தில், ஒட்டி இருக்கும் தோல் மற்றும் பட்டையை உணவு கரண்டியால் நன்றாக சுரண்டி எடுத்துவிட வேண்டும்.

நன்றாக வழுவழுவேன இருக்கும் தேங்காய் மூடியில்
- ஒரு நாட்டுக் கோழி முட்டையில் வெள்ளைக் கருவை மட்டும் போட்டு
- ஒரு கரியபவளம் போட்டு
- சிறிதளவு புனுகு அல்லது மரப்பிசின் போட்டு (50-100 கிராம்)
- பல் துலக்கும் புரூசால் நன்றாகக் கலக்கி
- 4 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்

மருத்துவ முறை
இரவு படுக்கைக்கு செல்லும் முன் வலி / முறிவு / தேய்மானம் உள்ள எழும்பு பகுதிகளில். கைப்படாமல் பல் புருசை கொண்டு, இந்த மருந்தை தடவி காய விட வேண்டும். இந்த மருந்தை குணமாகும் வறையில் தினமும் தேய்க்க வேண்டும்.

மருந்து முடிந்துவிட்டால், எது முடிந்து விட்டதோ. முட்டையின் வெள்ளைக் கரு, புனுகு, கரியபவளம். அதை மட்டும் சேர்த்துக் கொள்ளவும். தேங்காய் மூடியை மாற்றவோ கழுவவோ தேவையில்லை.

எலும்பு சம்பந்தமான தொந்தரவுகளுக்கு. இது அருமருந்து. மற்றவர்களுடன் பகிர்ந்துக்கொள்ளவும்.


« PREV
NEXT »

No comments