மழைக்காக ஏக்கத்துடன்
காத்திருக்கும் மனிதர்கள்
மழையைக்  கண்டதும்
ஒதுங்கி நிற்பதைப் போலத்தான்

நாள் முழுதும் - உனைகாண
ஏக்கத்துடன் காத்திருக்கும் நான்
நீ கடக்கும் வேளைகளில்

உன் கண்ணில் படாமல்
என்னை மறைத்துக் கொள்கிறேன்
என் காதலை மறைத்ததைப் போல