கேள்வி பதில்
கேள்வி பதில்

Bitcoin பிட்கோயின் சில விழிப்புணர்வு உண்மைகள்

சில காலத்துக்கு முன்பாக எந்த ஊடகத்தைப் பார்த்தாலும் பிட்கோயினை பற்றிய பேச்சுதான். ஊடகங்கள் ஏன் திடீரென பிட்கோயினை பற்றி பேசின?. ஊடகங்களுக்கு பிட்கோயினை பற்றி பேச என்ன தேவை உண்டானது? அல்லது அவற்றை பேச வைத்தது யார்? இது சிந்திக்க வேண்டிய விஷயம்.

Bitcoin பின்பாக இந்த உலகத்தையே அலையவிட்டுவிட்டார்கள். அந்த பிட்கோயினை பற்றி கொஞ்சம் சிந்தியுங்கள். பிட்கோயினை உருவாகிய Satoshi Nakamoto எனும் நபர் யார்?. அவர் எங்கு இருக்கிறார்? அவர் ஏன் பிட்கோயினை உருவாக்கினார்?

பிட்கோயின் அசூர விலையேற்றம் அடையும் முன்பாக ஏன்? எவ்வாறு? எங்கிருந்து? Microsoft நிறுவனர் Bill Gates ஏன் பிட்கோயினை வாங்கினார்? ரான்ஸோம் வைரஸை பரவவிட்டது யார்?. Ransom வைரஸ் பரவ விட்டு அதற்குத் தீர்வாக ஏன் பிட்கோயினை கேட்டார்கள்?

2010 யில் 0.10 அமெரிக்கா காசாக இருந்த பிட்கோயின், 2017யில் எவ்வாறு 19,706 அமெரிக்க டாலராக வளர்ந்தது? அதன் மதிப்பை நிர்ணயித்தது யார்?. பிட்கோயினை உருவாக்கிய Satoshi Nakamoto என்பவர் கூட யார் என்று தெரியாத சூழ்நிலையில் பிட்கோயினை, தற்போது உருவாக்குவது யார்? பாதுகாப்பது யார்? கண்காணிப்பது யார்?

பணக்காரர்கள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களின் கையில் சிக்குவதற்கு முன்பாக 1 அமெரிக்க டாலராக மதிப்பில் இருந்த பிட்கோயின் திடீரென அசூர வளர்ச்சி அடைந்ததின் பின்னால் யார் இருக்கிறார்கள்? இதில் கார்ப்பரேட் நிறுவனங்களின் சாதி இருக்கிறதா?

பிட்கோயின் தான் உலகை ஆளப்போகிறது. பிட்கோயின்தான் உலகின் எதிர்கால வர்த்தக நாணயம் என்றெல்லாம் பேசுபவர்கள், அவற்றை தாங்களே வைத்துக் கொள்ளாமல் ஏன் கூவி கூவி விற்பனை செய்கிறார்கள்?. பிட்கோயின் மட்டுமின்றி பிட்கோயினை போன்று இன்னும் நூற்றுக்கணக்கான மின் நாணயங்கள் (cryptocurrency) உள்ளன.

மக்கள் பிட்கோயினை வாங்குவதற்கு நூற்றுக்கணக்கான இணையச் சேவைகள் இருக்கும் போது, மக்கள் அதை விற்பதற்க்கு ஏன் இணையப் தளங்கள் இல்லை?. பிட்கோயினை வாங்க, விற்க, சேமிக்க, எந்த கட்டணமும் இல்லாத போது, பல இணைய நிறுவனங்கள், அவற்றை சேமிக்க, பரிமாற்றம் செய்ய, இலவசமாக இடமும், சேவையும், தருவது ஏன்?.

பெரும் செல்வந்தர்கள் சிலர் தங்களின் பிட்கோயின்களை விற்பனை செய்த பின்பாக, 20,000 அமெரிக்க டாலர் மதிப்பில் இருந்த பிட்கோயின் 6270 அமெரிக்க டாலராக சரிந்தது ஏன்?. அல்லது பிட்கோயினின் விலை சரிய போவது தெரிந்துதான் அவர்கள் விற்றார்களா?

ஒரு நாள் உலக வங்கி பிட்கோயின் செல்லாது என்று அறிவித்தால் பிட்கோயினை வைத்துக் கொண்டு என்ன செய்வீர்கள்? பிட்கோயினுக்கு பின்னல் ஒரு பெரிய கார்ப்பரேட் சதி இருப்பதாக நான் சந்தேகப்படுகிறேன். மக்களே சற்று விழிப்பாக இருங்கள். யாரையும் எதையும் நம்பி ஏமாறாதீர்கள். சிந்தித்து செயல்படுங்கள்.


« PREV
NEXT »

No comments