கேள்வி பதில்
கேள்வி பதில்

ஆங்கில மருத்துவத்தில் நோய்களும் பெயர்களும்

சிலர் வாயில் கூட நுழையாது ஒரு பெயரைக் கூறி. இந்த நோய்க்கு என்ன மருத்துவம்?. இதை எவ்வாறு குணப்படுத்துவது என்று கேட்பார்கள்?. அந்த பெயர் எனக்கும் புரியாது, அதை நோயென்று நம்பும் நபருக்கும் புரியாது.

அது என்ன பெயர் என்று சிந்தித்தால். மனிதர்களின் தொந்தரவுகளுக்கு ஆங்கில மருத்துவர்கள் சூட்டும் லத்தீன் மொழி பெயர்கள். அந்த பெயர்களை கேட்டதுமே நோயாளிகள் பயத்தில் பாதி செத்துவிடுவார்கள். உலகம் முழுவதும் இருக்கும் பல மொழிகளை பேசும், ஆங்கில மருத்துவர்கள் அனைவரும் புரிந்துகொள்வதற்காக, ஒரே மாதிரியான பெயரை மனிதர்களின் உறுப்புகளுக்கும், நோய்களுக்கும் சூட்டுகிறார்கள்.

மருத்துவர்களுக்கு எளிதாக புரியவும், மருத்துவத்தை எளிமையாக்கவும் ஒரே மாதிரியான பெயரை சூட்டுகிறார்கள். மருத்துவர்களுக்கு எளிதாக்க உருவாக்கப்பட்ட பெயரே நோயாளிகளுக்கு அச்சத்தை உருவாக்குகிறது. “Cephalgia” இது எந்த நோயின் பெயர் என்று புரிகிறதா?. ஏதோ ஒரு கொடிய நோயின் பெயர் போல தெரிந்தாலும் இதன் பொருள் தலைவலி. தலைவலி என்று சொல்லும்போது யாருக்கும் எந்த அச்சமும் உருவாகாது. ஆனால் உங்களுக்கு “செபல்ஜியா” உண்டாகிவிட்டது என்று ஒருவரிடம் சொல்லிப்பாருங்கள். அவரின் கதி அதோகதிதான்.

“Arthralgia” இதுவும் ஏதோ கொடிய நோயின் பெயர் அல்ல, “அற்றல்ஜியா” என்றால் மூட்டு வலி என்று அர்த்தம். மூட்டு வலிக்கிறது என்று ஒருவர் மருத்துவரிடம் சென்றால். மருத்துவர் அவருக்கு எதாவது மருத்துவம் செய்து அனுப்பினால் பாதகமில்லை. ஆனால் பெரும்பாலான மருத்துவர்கள், உங்களுக்கு “அற்றல்ஜியா” உருவாகிவிட்டது என்று நோயாளிகள். எந்த தொந்தரவுக்காக மருத்துவரை நாடி வந்தாரோ, அதே தொந்தரவை லத்தீன் மொழியில் மொழி பெயர்த்து சொல்வார். அதை கேட்டவுடனேயே நோயாளியின் மனதில் அச்சம் உருவாகிவிடும்.

நோயாளிகளிடம் ஆங்கில மருத்துவர்கள் கூறும் நோய்களின் பெயர்கள் பெரும்பாலும். உடலின் உறுப்பு அல்லது தொந்தரவுகளுக்கான லத்தீன் மொழி பெயராகும். அவை நோய்கள் அல்ல. நோயாளிகள் அந்த பெயர்களை மனதில் சுமந்துக் கொண்டு, அந்த பெயர்களுக்கு வைத்தியம் தேடுகிறார்கள். உடலின் தொந்தரவுகளுக்கு மட்டுமே மருத்துவம் பார்க்க முடியும். பெயர்களுக்கு எந்த வைத்தியமும் செய்ய முடியாது.

ஆங்கில மருத்துவர்கள் உங்கள் உடலின் தொந்தரவுகளுக்கு சூட்டிய பெயர்கள் அனைத்தையும் மறந்துவிட்டு. உங்கள் உடலில் என்ன தொந்தரவு இருக்கிறதோ அதற்கு மட்டும் வைத்தியம் செய்யுங்கள். உதாரணத்துக்கு Thyroid என்பது ஒரு நோயா?. தைராய்டு என்பது ஒரு சுரப்பி இந்த உலகத்தில் உள்ள அனைவருக்கும் தைராய்டு இருக்கும். என் உடல் பருமனாக இருக்கிறது, கழுத்து பகுதி வீக்கமாக உள்ளது, பாதம் வலிக்கிறது, கால் வீங்குகிறது என்பதை போன்ற உடல் உபாதைகளை தெரிவித்தால் மருத்துவம் கூறலாம். ஒருவர் எனக்கு தைராய்டு இருக்கிறது அதற்கு வைத்தியம் செய்யவேண்டும் என்றால், அவருக்கு என்ன செய்வது?.

உடலின் தொந்தரவுகளை குணப்படுத்த வேண்டுமென்றால், அந்த தொந்தரவுக்கு பெயர் சூட்டும் வேலையை செய்யாமல். அது என்ன தொந்தரவு? எப்போது உருவானது? எவ்வாறு உருவானது? எதனால் உருவானது? அதனால் உடலில் உருவான பாதிப்புகள் என்னென்ன என்பனவற்றை சிந்தித்தால் எல்லா நோய்களையும் எளிதாக குணப்படுத்தலாம்.


« PREV
NEXT »

No comments