சூரியன், நிலா, நட்சத்திரம்
மலை, நதி, கடல்
இவை இருப்பதை
யாரும் நம்ப வேண்டிய
அவசியமில்லை

கண் திறந்து பார்த்தாலே
இருப்பது தெரியும்
அதைப்போல்

என் அன்பை, காதலை
நீ நம்ப வேண்டிய
அவசியமில்லை

மனம் திறந்து பார்த்தாலே
என் உண்மை அன்பு
உனக்குப் புரியும்