கேள்வி பதில்
கேள்வி பதில்

திருக்குறள் கூறும் மருத்துவம்: குறள் 949
குறள் 949:
உற்றான் அளவும் பிணியளவும் காலமும், கற்றான் கருதிச் செயல்.

குறளின் உரை
மருத்துவம் பயின்றவர்கள் நோயை முறையாக குணப்படுத்த. நோய்வாய்ப்பட்டவரின் உடல் நிலையை அறிந்து. நோய்வாய்ப்பட்டவரின் நோயின் தன்மையை, நோயின் அளவை, நோயின் வீரியத்தை அறிந்து. அந்த நோயை குணப்படுத்த தகுந்த நேரம் காலம் பார்த்து. முறையாக மருத்துவம் செய்ய வேண்டும்.

குறள் விளக்கம்
இந்தக் குறளை மருத்துவர்களுக்காக திருவள்ளுவர் கூறுகிறார். ஒரு மருத்துவர் தன்னிடம் வரும் நோயாளிகளை முழுமையாக குணப்படுத்த, சில படிநிலைகளை வழிகாட்டுகிறார்.

முதலில் நோயாளியின் மனநிலை, உடல் நிலை, வாழ்க்கை முறைகளை அறிந்து கொண்டு. அவருக்கு உண்டாகியிருக்கும் நோயை அறிந்து, அந்த நோயின் தன்மை, அந்த நோயாளி நோயை அனுபவிக்கும் காலம், அந்த நோயின் வீரியம் போன்றவற்றை முதலில் ஆராயவேண்டும். அவற்றை அறிந்துக்கொண்ட பிறகு.

மருத்துவம் செய்ய தகுந்த சரியான காலத்தை அறிய வேண்டும். நோயாளியின் உடலின் மருத்துவத்தை ஏற்றுக்கொள்ளும் காலம், நோயாளிக்கு கொடுக்கும் மருந்தின் வீரிய காலம். நோயாளி வைத்தியத்தை ஏற்றுக்கொள்ளும் காலம். போன்றவற்றை ஆராய்ந்து, முறையாக மருத்துவம் கற்றவர் செயல்பட வேண்டும், அப்போதுதான் நோய்கள் முழுமையாகத் தீரும் என்கிறார் திருவள்ளுவர்.

« PREV
NEXT »

No comments