புதியவை
latest
latest
randomposts4

ஆரோக்கியம்

ஆரோக்கியம்/block-1

நோய்கள்

நோய்கள்/block-2

மருத்துவம்

மருத்துவம்/block-2

மனம்

மனம்/block-5

அக்குபஞ்சர்

அக்குபஞ்சர்/block-2

உயர் வள்ளுவம்

உயர் வள்ளுவம்/block-2

ஆன்மீகம்

ஆன்மீகம்/block-1

அமானுஷ்யம்

அமானுஷ்யம்/block-1

மின்னூல்கள்

மின்னூல்கள்/block-2

காதல் கவிதைகள்

காதல் கவிதைகள்/block-2

ரெய்கி கேள்வி பதில்கள்

கேள்வி பதில் காணொளிகள்/block-3

கதை சொல்லடா சார்

Kathai Sollata Sir/block-3
குழந்தைகள்

Latest Articles

மருத்துவரிடம் ஊசி போட்ட பிறகு குழந்தைகளுக்கு காய்ச்சல் உருவாவது ஏன்?

மருத்துவரிடம் சென்று குழந்தைகளுக்கு ஏதாவது ஊசி போட்டாலோ; அல்லது நோய் தடுப்பூசி போட்டாலோ, பல குழந்தைகளுக்கு காய்ச்சல் உருவாகும். இந்தக் காய்ச்சல் உருவாக காரணம் என்ன?.

குழந்தைகளுக்கு ஊசி போட்டவுடன் காய்ச்சல் உருவானால், குழந்தைகளுக்கு செலுத்தப்பட்ட ஊசியில் கலந்திருக்கும் ரசாயனங்களோ அல்லது கிருமிகளோ அந்தக் குழந்தையின் உடலுக்கு ஒத்துக் கொள்ளவில்லை என்று அர்த்தம். அந்த ஊசியில் கலந்திருக்கும் உடலுக்கு ஒவ்வாத ரசாயனங்களையும் கிருமிகளையும் கொல்வதற்காகத்தான், உடலானது தனது உஷ்ணத்தை அதிகரிக்கிறது. உடலின் உஷ்ணம் அதிகரித்து அதன் மூலமாக நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரித்து, அந்தக் கிருமிகளையும் ரசாயனங்களையும் எதிர்த்து உடல் போராடுகிறது. காய்ச்சல் என்பது உடலில் நன்மைக்காக மட்டுமே உருவாகும் என்பதை பெற்றோர்கள் உணர்ந்துக் கொள்ள வேண்டும்.

யாருக்காவது காய்ச்சல் உருவாகி, அந்த காய்ச்சல் அதிக நாட்கள் இருந்தால் மருத்துவர்கள் என்ன சொல்வார்கள்?. இது வைரஸ் காய்ச்சல், கிருமி காய்ச்சல், கிருமி தோற்று என்று கூறுகிறார்களா இல்லையா?. கிருமி காய்ச்சல், வைரஸ் காய்ச்சல், என்று மருத்துவர்கள் பெயர்கள் வைத்திருக்கும் போதே நமக்கு தெரியவேண்டும், கிருமிகள் உடலுக்குள் சென்றால் காய்ச்சல் உண்டாகும் என்பது.

எந்த காரணத்துக்காக மருத்துவர்கள், தண்ணீரை கொதிக்க வைத்து குடிக்க சொல்கிறார்களோ, அதே காரணத்துக்காகத்தான் கிருமிகள் உடலுக்குள் செல்லும் போது காய்ச்சல் உண்டாகிறது, கிருமிகளை கொல்வதற்கு.

காய்ச்சலை கட்டுப்படுத்த கொடுக்கப்படும் மருந்துகளும் ஊசிகளும் குழந்தைகளின் நோய்யெதிர்ப்பு சக்தியை கொன்று, ஊசியில் இருக்கும் குழந்தையின் உடலுக்குத் தீங்கான, கிருமிகளும், இரசாயனங்களும், உடலிலேயே தங்கிவிட துணை புரிகிறது. இன்று உடலில் தேங்கும் இந்த கிருமிகளும் இரசாயனங்களும் பின்னாட்களில் கொடிய நோய்களாக குழந்தைகளின் உடலில் வெளிப்பட வாய்ப்பிருக்கிறது.

சில குழந்தைகளுக்கு சிறுவயதில் காய்ச்சல் கண்ட பிறகு பேச்சு வராமல் போவதற்கும், பார்வை கோளாறுகள் உண்டாவதற்கும், மூளை வளர்ச்சி குறைவதற்கும், கை கால்கள் செயல் இழப்பதற்கும், இடுப்புக்குக் கீழ் செயல்படாமல் போவதற்கும் இது போன்ற ஊசிகளில் இருக்கும் ரசாயனங்களும் கிருமிகளுமே முக்கிய காரணமாக அமைகின்றன. முடிந்த வரையில் உங்கள் குழந்தைகளுக்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்த மருந்து மாத்திரைகள் கொடுக்காதீர்கள்.

ஒரு வேளை குழந்தைகளுக்கு காய்ச்சல் உண்டானால், ஈரத்துணியை நனைத்து தலையிலும், முகத்திலும், நெஞ்சிலும், துடைத்து விடுங்கள். ஒரு துணியை ஈரமாக்கி நெற்றியில் பற்றுக் கொடுங்கள். உணவு ஏதும் கொடுக்காதீர்கள். காய்ச்சல் படிப்படியாக குறைந்துவிடும். ஒருவேளை மருத்துவம் தேவைப்பட்டால், இயற்கை மருத்துவத்தை மட்டும் நாடுகள் ரசாயனங்களை எந்தக் காரணத்தைக் கொண்டும் குழந்தைகளுக்கு கொடுக்காதீர்கள்.

Image by Steve Buissinne from Pixabay

முக்காலத்து செய்திகளும் கிடைக்கும் வழிமுறைகள்

மன ஓர்மை பெற்றவர்களுக்கு திரிகாலத்தில் இருந்தும் எவ்வாறான செய்திகள் கிடைக்கும்? அந்த செய்திகள் எவ்வாறு அவர்களை வந்தடையும்?

இந்த ஆற்றலை பெற்றவர்களுக்கு தொடக்கத்தில் அவர்கள் விரும்பிய செய்திகளை அறிந்துக்கொள்ள முடியாது. எதர்ச்சையாக ஓரிரு செய்திகள் மட்டுமே அவர்களை வந்தடையும். அவர்களின் மனமானது பக்குவமடைய தொடங்கும்போது, அவர்களுக்கு நன்மை தரக்கூடிய செய்திகளும். அவர்களை எச்சரிக்கும் செய்திகளும் கிடைக்கும். பின்பு அவர்களின் குடும்பத்தார்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு ஏற்படக்கூடிய கெடுதல்கள் எச்சரிக்கை செய்திகளாக கிடைக்கும்.

பின்பு அவர்களின் குடும்பத்திலும், உறவிலும் நடக்கவிருக்கும் நல்ல மற்றும் கெட்ட நிகழ்வுகள் முன்னதாகவே கிடைக்க தொடங்கும். பிறகு சிறிது காலத்தில், மற்ற மனிதர்களின் வாழ்விலும், இந்த உலகத்திலும் நடக்கவிருக்கும் நல்ல மற்றும் கெட்ட விசயங்கள் தெரிய தொடங்கும்.

மனம் முதிர்ச்சி அடையும்போது அவர்களின் வாழ்வில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வுகளுக்கான காரண காரியங்களும் விளங்கத் தொடங்கும். பின்பு இப்போது நடக்கும் நிகழ்வுகளுக்கு முற்கால வாழ்கையில் நடந்த நிகழ்வுகளுக்கும் உள்ள தொடர்புகள் கிடைக்க தொடங்கும். இப்போது செய்யும் செயல்கள் பிற்காலத்தில் என்னென்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்பதும் விளங்கும். இறுதியாக அவர்கள் விரும்பும் காலத்துக்கு மனம் சென்று, விரும்பிய காலத்தில் நடந்த, நடக்கும் மற்றும் நடக்கவிருக்கும் விஷயங்களை அறிந்துக் கொள்ளலாம்.

செய்திகள் கிடைக்கும் வழிமுறைகள்

1. சிலருக்கு காதுகளில் மெல்லிய குரலாக செய்திகள் கேட்கும்

2. சிலருக்கு மனதுக்குள் குரலாக செய்திகள் கிடைக்கும்.

3. சிலருக்கு மனதுக்குள் எழுத்துக்களாகத் தெரியும்.

4. சிலருக்கு அந்த நிகழ்ச்சி அவரின் முன்பாக நடப்பதை போன்றும், அவர் அதை காண்பதை போன்றும் இருக்கும்.

5. சிலருக்கு சில நிகழ்வுகள் நிழலைப் போன்று தெரியும்.

6. சிலருக்கு புகைப் போன்றும் நிழலைப் போன்றும் உருவங்களும், காட்சிகளும் தெரியும்.

7. சிலருக்கு நடக்கவிருக்கும் அல்லது நடந்த விசயங்கள் சினிமா காட்சிகளைப் போன்று கண்களுக்குள் ஓடும். சிலருக்கு மனதுக்குள் ஓடும். சிலருக்கு தலைக்குள் ஓடும்.

8. சிலருக்கு நடக்கவிருக்கும் நிகழ்வுகள் முன்கூட்டியே கனவில் காட்டப்படும்.

9. சிலருக்கு மற்ற மனிதர்கள் மூலமோ, பத்திரிக்கைகள், புத்தகங்கள், தொலைக்காட்சி, வானொலி, போன்ற விசயங்கள் மூலமோ உணர்த்தப்படும்.

10. சிலருக்கு நடக்கவிருக்கும் நிகழ்வுகள் நடந்துவிட்டவைப் போன்றும் அதை அவர் முன்கூட்டியே கண்டுவிட்டதை போன்றும் அனுபவித்ததைப் போன்றும் தோன்றும்.

11. சிலருக்கு மனதுக்குள்ளேயே விவாதங்கள் நடக்கும். அதாவது அவரே கேள்விகளை கேட்டுக்கொண்டு, அவரே பதில்களையும் சொல்லிக்கொள்வார். ஆனால் அந்த பதிலை அப்போதுதான் அவர் முதன் முதலில் அறிவார். அந்தக் கேள்விகளும், பதில்களும் அவருக்கு அறிவிக்கப்படுகின்ற செய்திகளாக இருக்கும். மனதுக்குள் நடைபெறும் இந்த கேள்வி பதில் நிகழ்ச்சி, அவருக்கு தெரியாத விஷயங்களை அவருக்கு கற்றுத்தரும் ஒரு வழிமுறையாகும்.

சிலருக்கு இவற்றில் ஒன்று இருக்கும், சிலருக்கு இவற்றில் சில இருக்கும், சிலருக்கு அனைத்துமே இருக்கும். சிலருக்கு மற்ற வழிமுறைகளிலும் செய்திகள் கிடைக்கலாம். இதுவும் அவர் அவர் கர்மப் பலனை பொறுத்தே அமையும்.

முத்திரைகளில் மூலமாக உடலின் ஆற்றலை அதிகரிக்க முடியுமா?


Acceptance - நம் வாழ்க்கையை மாற்றக் கூடிய ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மை

நடக்கப்போகின்ற, விஷயங்களை எவ்வாறு அறிந்துக்கொள்கிறார்கள்?

நடந்த, நடக்கின்ற, நடக்கப்போகின்ற, விஷயங்களை எவ்வாறு அறிந்துக் கொள்கிறார்கள்?.

இப்போது நடக்கின்ற ஒரு விஷயத்தை விளக்கினால் புத்திக் கூர்மை என்று கூறலாம். பல வருடங்களுக்கு முன்பாக நடந்து முடிந்த ஒரு விஷயத்தை இன்று திடீரென உணர்ந்துக் கொள்கிறார்கள் என்றால், அதற்குரிய விளக்கம் கூறுகிறார்கள் என்றால் அதை எவ்வாறு விளக்குவது? நடந்து முடிந்தவற்றை எப்படியோ அறிந்துக் கொண்டார்கள் என்றாலும், இன்னும் நடக்காத பல வருடங்கள் கடந்து நடக்கவிருக்கும் ஒரு விஷயத்தை இன்றே முன்னறிவிப்பு செய்கிறார்கள் என்றால் அதை எவ்வாறு விளக்குவது? அந்த விசயங்கள் அவர்களுக்கு எவ்வாறு தெரிந்தது?

அது ஒன்றும் பெரிய வித்தையல்ல, அதுதான் மனதின் ஆற்றல். மனமானது முக்காலத்திலும் பயணிக்கும் ஆற்றலுடையது. மனமானது ஒருநிலையில் நிற்கும்போது, அது தனது கால எல்லைகளை கடந்துவிடுகிறது. ஒருவரின் மனம் ஒருநிலையில் நிற்கும்போது அவர் முக்காலத்திலும் நடந்த விசயங்களை அறிந்துக்கொள்ளும் ஆற்றலை பெறுகிறார். மனம் மட்டும் ஒருநிலை பெற்றுவிட்டால், இந்த உலகத்து உயிர்களும் இயற்கையும் உற்பட இந்த பிரபஞ்சத்தில் உள்ள அனைத்துமே அவருக்கு கட்டுப்படும்.

ஒரு சிலருக்கு பிறக்கும்போதே இந்த ஆற்றல் இருந்து பின் மறையும். ஒரு சிலருக்கு பிறந்து சில காலங்களில் உருவாகும். ஒரு சிலருக்கு சில பயிற்சிகளின் மூலமாக சித்திபெறும். ஆனால் ஒரு சிலருக்கு பிறந்தது முதல் இறுதி வரையில் இருக்கும். இந்த ஆற்றல் தன்னிடம் இருப்பதை சிலர் உணர்வார்கள், சிலர் உணரவே மாட்டார்கள். அனைத்துமே அவர் அவர் கர்ம பலன்களை பொறுத்து அமையும்.